சென்னை : தமிழகத்தில் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாடு மற்றும் பத்திரப் பதிவுகளை, இணைய தள முறையில், கேமராக்கள் உதவியுடன், உயர் அதிகாரிகள், நேரடியாக கண்காணிக்கும் பணிகள், நாளை (நவ., 6ம் தேதி) முதல், நடைமுறைக்கு வருகிறது. பத்திரப் பதிவிலும், சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை தவிர்த்து விட்டு வரும் யாருக்கும், சார் - பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது என்ற சூழலே நிலவுகிறது.இதனால், நிலமோசடி, ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்செயல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.இந்த முறைகேடுகளை தடுக்க, பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், சில முடிவுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், 'வெப்' மற்றும், 'இன்டர்நெட் புரோட்டோகால் - ஐ.பி.,' கேமராக்களை நிறுவவும், அதில் பதிவாகும் காட்சிகளை, பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 578 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் கேமராக்கள் அமைக்கும் பணி, 'எல்காட்' உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பத்திரப் பதிவு நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
மூன்று கேமராக்கள்:இது குறித்து, பதிவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இப்புதிய திட்டத்துக்காக, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், மூன்று கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, அலுவலகங்களுக்குள் யார், யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க, உட்புறமிருந்து நுழைவாயிலை நோக்கி ஒரு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒலி இன்றி வெறும் காட்சிகள் மட்டும் பதிவாகும்.இதற்கு அடுத்தபடியாக, சார் - பதிவாளர் இருக்கையை நோக்கி இருக்கும் வகையில், ஒலி, ஒளி காட்சிகள் பதிவாகும் வகையில், ஒரு கேமரா செயல்படும்.பத்திரப்பதிவின் போது, சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள், உடன் இருப்பவர் என, அனைவரது செயல்பாடுகளும் இதில் துல்லியமாக பதிவாகும்.
பிரதி பெற வசதி:இதில் ஒவ்வொரு பத்திரப்பதிவு குறித்த நிகழ்வுகள், 20 நிமிடம் வரை பதிவாகும். இந்த பதிவின் பிரதியை மட்டும், சொத்து விற்பவர், வாங்கு வோர், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, சி.டி.,யாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விரு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, அந்தந்த மண்டலத்துக்குரிய பதிவுத் துறை துணை தலைவர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தும் நேரடியாக கண்காணிக்க முடியும்.மேலும், சந்தேகத்திற்குரிய நிகழ்வு எதுவும் நடந்தால், பதிவுத் துறை துணை தலைவர் அல்லது பதிவுத் துறை தலைவர், நேரடியாக சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியும்.
மாற்றம்:இதற்கு அடுத்தபடியாக, பத்திரப்பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் இருவரது புகைப்படம், கைரேகை போன்றவை பத்திரத்தின் முதல் பக்க பின்புறம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, பதிவுக்கு வருவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்து வரவேண்டியிருந்தது. இனி, பதிவுக்கு வருவோரின் புகைப்படம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள, மூன்றாவது கேமரா மூலமே நேரடியாக எடுக்கப்படும்.மேலும், இதுவரை 'மை' பயன்படுத்தி கைரேகை பதிவு செய்த நடைமுறை மாற்றப்பட்டு, 'பயோ மெட்ரிக்' முறையில் இனி கைரேகை பதிவு செய்யப்படும்.இப்புதிய நடைமுறைகள் சார் - பதிவாளரை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும், நாளை முதல் (நவ., 6ம் தேதி) நடைமுறைக்கு வருகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இப்போது துவங்கியுள்ளது.அடுத்த, 12 நாட்களில் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
புரோக்கர் இன்றி எதுவும் நடப்பதில்லை:தமிழகத்தில் செயல்படும், 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலும், புரோக்கர்களின் துணையின்றி பொது மக்களால், அதிகாரிகளை அணுகவே முடியாத சூழல் நிலவுகிறது.குறிப்பாக, பத்திரப் பதிவுக்கான ஆவணங்களை, பதிவுத் துறை இணைய தளத்தில் உள்ள, மாதிரிகளின் அடிப்படையில், பொதுமக்களே தயாரித்து எடுத்து வரலாம்.ஆனால், ஆவண எழுத்தர் என்ற பெயரில் செயல்படும் புரோக்கர்கள் துணையின்றி, இது போன்று, பொதுமக்கள் எடுத்து வரும் ஆவணங்களை, சார் பதிவாளர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை.அதில் ஏதாவது காரணம் சொல்லி திருப்பி அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.இதனால், வேறு வழியின்றி, பொதுமக்கள் புரோக்கர்களை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.பெரும்பாலான பத்திரப்பதிவுகளின் போது, அங்கு புரோக்கர்கள் தவறாமல் இருக்கின்றனர்.இது தவிர, வில்லங்க சான்று பெறுவது, பிரதி ஆவணம் பெறுவது, திருமண பதிவு போன்ற பல அத்தியாவசிய பணிகளும், புரோக்கர்கள் ஒப்புதல் இன்றி நடக்காது என்பதே, பதிவு அலுவலகங்களின் இன்றைய சூழல்.
வெளிப்படை முறை இல்லை; திட்டம் 'அம்பேல்' தான்: சார் -- பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாடுகளை, உயர் அதிகாரிகள் கேமரா மூலம் கண்காணிப்பதால், இத்துறையில் எந்த அளவுக்கு வெளிப்படை தன்மை ஏற்படும் என்பது, இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.அதிக அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு உட்படும் அரசுத் துறைகளில் ஒன்றாக, பத்திரப் பதிவுத் துறை இருந்து வருகிறது.குறைந்தபட்சம், மாதத்துக்கு, இரண்டு பேர் வீதம், ஆண்டுக்கு, 20 பேராவது இத்துறையில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் பிடிபடுகின்றனர் என்று கூறப்படுகிறது.இந்த சூழலில், சார்பதிவாளர் அலுவலகங்களில் கேமராக்கள் வைத்து, அதை அத்துறையை சேர்ந்தவர்களே, அதாவது பதிவுத் துறை துணை தலைவர், பதிவுத்துறை தலைவர் ஆகியோர் கண்காணிப்பதால், எப்படி வெளிப்படை தன்மை வரும் என்பது, பொது மக்களின் கேள்வியாக உள்ளது.சார் - பதிவாளர்கள் வாங்கும் லஞ்சத்தில் குறிப்பிட்ட சதவீதம் மேலதிகாரிகளுக்கு செல்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வரும் நிலையில், அவர்கள், தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் எவ்வளவு லஞ்சம் வாங்குகின்றனர் என்பதை கண்காணிக்க மட்டுமே, இம்முறை உதவும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.பதிவுத் துறை இணையதளம் மூலம், இந்த கேமரா காட்சிகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை வந்தால், உண்மையான வெளிப்படை தன்மைக்கு வழி பிறக்கும் எ